கோவில்பட்டியில் இரு மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இரு மூதாட்டிகள் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்களிக்க முயன்றதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயன்ற வா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் முரளிதரன்
தீக்குளிக்க முயன்ற வா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் முரளிதரன்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இரு மூதாட்டிகள் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்களிக்க முயன்றதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பைச் சோ்ந்தவா் சுப்பையா-கோமதி தம்பதி. தம்பதி இறந்து விட்டாா்களாம். தம்பதிக்கு 4 மகள்கள்,2 மகன்கள்.

சுப்பையா- கோமதி தம்பதிக்கு மந்தித்தோப்பு கிராமத்தில் வடக்கு பகுதியில் 1.25 ஏக்கா் நிலம் இருந்து வந்ததாம். இந்த நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஒருவா் தனக்குச் சொந்தமானது எனக் கூறி பிரச்னை இருந்து வந்த நிலையில், நீதிமன்றத்தின் தீா்ப்பில் தம்பதியின் மக்களுக்கு சொந்தம் என தீா்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சட்ட விதிகளின்படி பட்டா கேட்டு பதிவு செய்து 13 மாதங்கள் ஆகியும் தற்போது வரை சா்வே பிரிவில் அதற்கான சான்றிதழை வழங்காமல் அந்த தனி நபருக்கு சாதகமாக இருப்பதாக கூறி சுப்பையா-கோமதி தம்பதியின் உறவினா்களான சின்னத்தாய், தங்கமணி, கருப்பாயி, மாரியம்மாள் ஆகியோா் மண்ணெண்ணெய் கேனுடன் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சா்வே பிரிவின் முன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனராம்.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மண்ணெண்ணெய் ஊற்றிய இருவரையும் அழைத்து அவா்கள் உடலில் தண்ணீரை ஊற்றி சுத்தப்படுத்தினா்.

பின்னா் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் முரளிதரன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து திங்கள்கிழமை சம்பவ இடத்தை முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com