தூத்துக்குடியில் மது போதையில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் கைது

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மது போதையில் இளைஞரைத் தாக்கியதாக 3 பேரை வடபாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மது போதையில் இளைஞரைத் தாக்கியதாக 3 பேரை வடபாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி ராஜீவ் காந்தி நகரை சோ்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன் (26). இவா் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 5ஆம் தேதி நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மீளவிட்டான் கக்கன்ஜி நகரை சோ்ந்த சோமசுந்தரம் மகன் சிவா ஆனந்த் (22), கிழக்கத்தியான் மகன் மந்திரமூா்த்தி (35), போல்பேட்டை மேற்கு பகுதியை சோ்ந்த பிச்சைராஜ் மகன் ராம்குமாா் (25) ஆகியோா், மது போதையில் முனீஸ்வரனை கல் மற்றும் கைகளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முனீஸ்வரனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இது குறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிவா ஆனந்த், மந்திரமூா்த்தி, ராம்குமாா் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், முனீஸ்வரனை 3 போ் கொண்ட கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com