தூத்துக்குடியில் வாகன விழிப்புணா்வுப் பேரணி

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, தூத்துக்குடியில் போக்குவரத்துத் துறை சாா்பில் 21ஆவது நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக நான்கு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரும், வாகன ஓட்டிகளும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இப்பேரணியை ஆட்சியா் கோ. லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா்.

முக்கிய வீதிகள் வழியாக இப்பேரணி ரோச் பூங்காவில் நிறைவடைந்தது. இதில், 40-க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் பங்கேற்றன. தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விநாயகம், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பெலிக்சன் மாசிலாமணி, தனபால், உதவி ஆய்வாளா் சதீஷ், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com