பழங்குளம் ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை, அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

சாத்தான்குளம் ஒன்றியம் பழங்குளம் ஊராட்சியில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் ரூ5.20 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழங்குளம்  ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை, அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

சாத்தான்குளம் ஒன்றியம் பழங்குளம் ஊராட்சியில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் ரூ5.20 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதி ரூ. 13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சித் தலைவா் செல்வக்கனிசெல்வதுரை தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவா் ஜெயபதி, வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ், வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்துப் பேசினாா்.

இதில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வடக்கு வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி, நெல்லை மாநகர காங்கிரஸ் செயலா் ராதாகிருஷ்ணன், வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் லாரன்ஸ் கிளிங்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் இசக்கியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com