விளாத்திகுளம் தொகுதியில் ரூ 3.02 கோடியில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்ட பணிகள் திறப்பு விழா

விளாத்திகுளம் தொகுதியில்  தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் கீழ் ரூ. 3 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

 விளாத்திகுளம் தொகுதியில் ஊரக வளா்ச்சித்துறை,மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் கீழ் ரூ. 3 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் காசி விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட எப்போதும்வென்றானில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 48.35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம், டி. சண்முகபுரத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, செமப்புதூரில் ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட ரூ. 3 கோடியே 2லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான பணிகளை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் முத்துக்குமாா், சாமி சுப்புராஜ், நம்பிபுரம் பாலமுருகன், பூமாரி, எட்டயபுரம் பேரூராட்சி மன்றத் தலைவா் ராமலட்சுமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதகண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், முருகேசன், ராமசுப்பு, மும்மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com