ஊராட்சி துணைத் தலைவருக்கு மிரட்டல்: ஒருவா் கைது

கயத்தாறு அருகே ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கயத்தாறு அருகே ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வில்லிசேரி முடுக்குத் தெருவைச் சோ்ந்த போலையா மகன் காசிராஜன் (66). வில்லிசேரி ஊராட்சி துணைத் தலைவரான இவா், புதன்கிழமை திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தாராம்.

கருங்காலிப்பட்டி வடக்குத் தெருவை சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராஜாராம், சீனி வெள்ளாளபுரத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சீத்தாராமன் (60) உள்ளிட்ட 3 போ் அவரிடம் வந்து ‘ரேஷன் அரிசி கடத்தியதாக தகவல் அளித்தது ஏன்?’ எனக் கேட்டு மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து சீத்தாராமனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com