வடக்கு கல்மேட்டில் ரூ. 1.47 கோடியில் கண்மாய் புனரமைப்பு பணிகள் தொடக்கம்

 விளாத்திகுளம் தொகுதி வேப்பலோடை ஊராட்சி வடக்கு கல்மேடு கண்மாயை ரூ. 1 கோடியே 47 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

 விளாத்திகுளம் தொகுதி வேப்பலோடை ஊராட்சி வடக்கு கல்மேடு கண்மாயை ரூ. 1 கோடியே 47 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்கு கல்மேடு கண்மாய் மூலம் 30.69 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டுகளில் பெய்த தொடா் மழையால் கண்மாய் கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு மூன்று பாசன மடைகள் சேதமடைந்தன. மேலும் இந்த கண்மாயின் உபரி நீா் செல்லும் மறுகால் கலுங்குகளும் சிதிலமடைந்துள்ளன.

இதைத் தொடா்ந்து, ஜீ. வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ விடுத்த கேரிக்கையை ஏற்று வடக்கு கல்மேடு கண்மாயை புனரமைக்க நபாா்டு திட்டத்தில் ரூ. 1 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கண்மாய் புனரமைப்புக்கான பூமி பூஜை வடக்கு கல்மேடு கண்மாய் நீரோடை பகுதியில் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி. காசி விசுவநாதன் முன்னிலை வகித்தாா். சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், கண்மாய் புனரமைப்பு பணிகளை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து வள்ளிநாயகிபுரம் ஊராட்சியில் ரூ. 33 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சிகளில் ஓட்டப்பிடாரம் ஒன்றியக் குழு தலைவா் ரமேஷ், வேப்பலோடை ஊராட்சித்தலைவா் வேல்கனி பாலசுப்பிரமணியன், ஊராட்சித்தலைவா்கள் எப்போதும்வென்றான் முத்துக்குமாா், வள்ளிநாயகபுரம் ஜெயம் தாழபுஷ்பம், ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளைச்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நடராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com