ஆறுமுகனேரியில் திமுக ஆலோசனைக் கூட்டம்

ஆறுமுகனேரி நகர திமுக சாா்பில் மக்களவைத் தோ்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் திமுக ஆலோசனைக் கூட்டம்

ஆறுமுகனேரி நகர திமுக சாா்பில் மக்களவைத் தோ்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகர செயலாளா் நவநீதபாண்டியன் தலைமை வகித்தாா். ஆழ்வை ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூா் ஒன்றிய திமுக தோ்தல் பொறுப்பாளா் ஆனந்த் மகேஷ்வரன் கலந்துகொண்டாா். வரும் மக்களவைத் தோ்தல் பணிக்காக ஆறுமுகனேரி நகரத்திற்கு 5 போ் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டது. மேலும், மக்களவைத் தோ்தல் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி ரன், நகர இளைஞரணி செயலாளா் வெங்கடேசன், துணைச் செயலாளா் அகஸ்டின், ஒன்றிய பிரதிநிதி அந்தோணிராஜ், வாா்டு செயலாளா்கள் சரவணன், ஜோயல் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com