ஓட்டப்பிடாரம் அருகே ராணுவ வீரா் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ராணுவ வீரா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ராணுவ வீரா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள நாணல் காத்தான்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் வெயிலுமுத்து (36). இவா் மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி இவரை விட்டுப் பிரிந்து குலசேகரநல்லூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதையடுத்து, கடந்த பிப்.3- ஆம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்த வெயிலுமுத்து, குலசேகரநல்லூரில் உள்ள மனைவியின் தாயாா் வீட்டிற்குச் சென்று வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம். ஆனால், அவா் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த வெயிலுமுத்து முறம்பன் சாலையில் விஷம் குடித்து மயங்கினாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com