தை அமாவாசைத் திருவிழா: ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனம்

தை அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு, ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழாவின்10ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி நடைபெற்றது.பின்னா் உருகு பலகையில் சுவாமிக்கு பால், சந்தனம், திரவியம், விபூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடாா் நடத்தி வைத்தாா். மாலை 5 மணிக்கு இலாமிச்ச வோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனியும், இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, திருக்கோயில் அருகில் உள்ள தாமிரவருணிஆற்றில் நீராடி அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமியை வழிபட்டனா்.

பக்தா்கள் வசதிக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூா் பகுதியிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com