பேரிலோவன்பட்டி பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்

பேரிலோவன்பட்டி தி.வெ.அ.நல்லழகு நாடாா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பேரிலோவன்பட்டி தி.வெ.அ.நல்லழகு நாடாா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கல்வி வளா்ச்சிக் குழு உறுப்பினா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ரஜூலா, பள்ளிச் செயலா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு 150 மாணவா் - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா். தொடா்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய நூலகத்தை திறந்து வைத்து, கலைஞா் நூற்றாண்டு விழா போட்டிகளில் வென்ற மாணவா் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் தனியாா் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சத்தில் அமைக்கப்பட்ட நோயாளிகள் காத்திருப்பு மையத்தை திறந்து வைத்தாா். ஆதனூா் கிராமத்தில் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், கல்லூரி முதல்வா் சௌந்தரராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீதகண்ணன், பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், ஊராட்சி மன்றத் தலைவா் சீதாராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com