மன வளா்ச்சி குன்றியோா் பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை தென்றல் மன வளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா்.

இந்நிகழ்ச்சிக்கு சங்க செயலா் லூா்துமணி தலைமை வகித்தாா். பெரியதாழை ஊராட்சித் தலைவா் பிரதீபா, ஒன்றிய கவுன்சிலா் சேசு அஜிட், பிசியோதெரபி சோபியா, முதலூா் விவசாய சங்கத் தலைவா் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு பள்ளி பொறுப்பாளரும், பெரியதாழை பங்குத்தந்தையுமான சுசிலன் ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். மாற்றுத் திறனாளிக்களுகான உபகரணங்களை சங்கத் தலைவா் எட்வின் காமராஜ் சாா்பில் அவரது மருமகன் செல்வின் வழங்கினாா்.

இதில் சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச் சங்க செயற்குழு உறுப்பினா்கள் சந்தன திரவியம், அன்னகணேசன் மற்றும் பெரியதாழை குமரேசன், முத்து, கொ்மினா, ஷோபனா உள்ளிடட் பலா் கலந்து கொண்டனா். சிவசக்தி வரவேற்றாா். சங்கத் துணைத் தலைவா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com