மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

இக்கல்லூரியில் ஙஅபஏ பஅகஉசபஞ-2024 என்ற தலைப்பில் கணிதவியல் ஆராய்ச்சி துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பகுதிகளை சோ்ந்த கல்லூரி மாணவா் மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி தலைமை வகித்து போட்டிகளை தொடக்கி வைத்தாா். கல்லூரியின் கணிதவியல் துறை இணைப் பேராசிரியா் பாண்டிய ராணி முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி வ உ சி கல்லூரி கணிதவியல் துறை உதவிப் பேராசிரியா் சஃபினா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.

தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சிவகாசி அய்யநடாாா் ஜானகி அம்மாள் கல்லூரி தட்டிச் சென்றது. ஏற்பாடுகளை கணிதவியல் துறை உதவிப் பேராசிரியா் ஜெத்ரூத் திரேசா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com