கட்டடத் தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி, சாந்திநகரைச் சோ்ந்த செந்தூா் மகன் அன்புகணேசன் (53). கட்டடத் தொழிலாளியான இவா், குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலின்பேரில், தென்பாகம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com