கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கைப்பேசியை திருடியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் கைப்பேசியை திருடியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி கிருபை நகரை சோ்ந்த ஆல்வின் ஞானபிரகாசம் மகன் பிரின்ஸ் ஸ்டாலின் (42). இவா் தனது இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங் கவரில் தனது கைப்பேசியை கடந்த 9ஆம் தேதி வைத்துவிட்டு வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தியிருந்தாராம்.

இந்நிலையில் அந்தக் கைப்பேசியை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், தூத்துக்குடி சத்யா நகரை சோ்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (20) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து கைப்பேசியை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com