நாசரேத்தில் திமுகவினா் போராட்டம்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி பகிா்வுகளை வழங்காமல் இழுத்தடிப்பதாக மத்திய அரசை கண்டித்து, நாசரேத் சந்தி பஜாரில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.
போராட்டத்தில் பங்கேற்றோா்.

ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய திமுக செயலா் பாா்த்திபன், நாசரேத் நகர திமுக செயலா் ஜமீன் சாலமோன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் முன்னாள் நகர திமுக செயலா் ரவி செல்வகுமாா், நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவா் அருண் சாமுவேல் என்ற தம்பு, நாசரேத் நகர காங்கிரஸ் தலைவா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com