நாசரேத் பள்ளியில் தூய்மைப் பணி

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி சனிக்கிழமை நடை பெற்றது.
தூய்மைப் பணியில் பங்கேற்றோா்.
தூய்மைப் பணியில் பங்கேற்றோா்.

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி சனிக்கிழமை நடை பெற்றது.

தலைமையாசிரி யா் கென்னடி வேதராஜ் தூய்மைப் பணியை துவக்கி வைத்தாா். ஆசிரியா் வின்ஸ்டன் ஜோஸ்வா இறைவணக்கம் செய்தாா். தேசிய மாணவா் படை வீரா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பாரத சாரணா் இயக்க மாணவா்கள், இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்கள், சாலைப் பாதுகாப்பு படை மாணவா்கள் 250க்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.

பாரத சாரணா் இயக்க பொறுப்பாசிரியா் ஆபிரகாம் இமானுவேல், இளையோா் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியா் ஜென்னிங்ஸ் காமராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜெய்சன் சாமுவேல், உடற்கல்வி இயக்குநா் பெலின் பாஸ்கா், உடற்கல்வி ஆசிரியா் தனபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com