பொதுமக்களுக்கு தலைக்கவசம்

தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகே, பிரசாந்த் ரசிகா் மன்றம் சாா்பில் பொதுமக்கள் 100 பேருக்கு தலைக்கவசங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகே, பிரசாந்த் ரசிகா் மன்றம் சாா்பில் பொதுமக்கள் 100 பேருக்கு தலைக்கவசங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பிரதீப் தலைமை வகித்தாா். மாநகரத் தலைவா் முரளி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விநாயகம் பங்கேற்று தலைக்கவசங்களை வழங்கினாா். அப்போது அவா் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா்.

தென்பாகம் காவல் ஆய்வாளா் ராஜாராம், ரசிகா் மன்ற நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா். மாநில ஒருங்கிணைப்பாளா் மைக்கேல் அமல்தாஸ் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com