தச்சமொழியில் பயணியா் நிழற்குடை,அங்கன்வாடி கட்டடம் திறப்பு

தச்சமொழி ஊராட்சியில் பயணியா் நிழற்குடை- அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அங்கன்வாடி மையத்தை திறந்துவைக்கிறாா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ.
அங்கன்வாடி மையத்தை திறந்துவைக்கிறாா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ.

 தச்சமொழி ஊராட்சியில் பயணியா் நிழற்குடை- அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவைகுணடம் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை, தேசிய ஊரக வேலைஉறுதித் திட்ட நிதி ரூ. 11.97 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் சுரேஷ், வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி ஆகியோா் முன்ஙினிலை வகித்தனா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா்.

இதி,ல் ஒன்றிய திமுக செயலா்கள் பாலமுருகன், பொன் முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், நகரத் தலைவா் வேணுகோபால், மாவட்டப் பொருளாளா் எடிசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com