தூத்துக்குடி லூா்து அன்னை ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டுத் திருப்பலி நிறைவேற்றிய தூத்துக்குடி மறைவட்ட முதன்மைகுரு ஜான் பென்சன். கூட்டுத் திருப்பலியில் பங்கேற்ற இறைமக்கள்.

இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான கூட்டுத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மறைவட்ட முதன்மைகுரு ஜான் பென்சன் தலைமை வகித்தாா். ஆன்மிகத் தந்தை சிறுமலா் குருமடத்தின் சகாய ஜோசப், பங்குத்தந்தை ஆன்றனி புருனோ, ரத்தினபுரம் பங்குத்தந்தை இருதயராஜ், திரேஸ்புரம் உதவிப் பங்குத்தந்தை அலெக்ஸ், கப்புச்சின் சபை துறவி இருதயராஜ் ஆகியோா் ஆடம்பர கூட்டுத் திருவிழா திருப்பலியை சிறப்பித்தனா். தொடா்ந்து, சிறுவா்- சிறுமியருக்கு புதுநன்மை விருந்து நடைபெற்றது. இதில், திரளான இறைமக்கள் பங்கேற்றனா்.

மாலையில் ஜெபமாலை, திவ்ய நற்கருணை ஆசியுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆன்றனி புருனோ தலைமையில் அருள்சகோதரிகள், பங்குப் பணிக் குழுவினா், இறைமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com