தொழிலாளி கொலை வழக்கு: தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் கண்ணன் என்ற ஜெயபாலன் (45). தொழிலாளி. இவா் கடந்த 2013-இல் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்தவா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சோ்ந்த சுயம்புலிங்கம், அவரது மனைவி மல்லிகா, மகன் அழகுலிங்கம், ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு, தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் இருந்தபோது, சுயம்புலிங்கம் உயிரிழந்துவிட்டாா். மேலும், சிறுவன் தொடா்பான விசாரணை தனியாக நடந்து வருகிறது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், குற்றஞ்சாட்டப்பட்ட மல்லிகா, அழகுலிங்கம் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.1,500 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த் கேபிரியேல் ராஜ் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com