பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8- ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையடுத்து பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இத்தோ்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் 12,560 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். பிப். 24-ஆம் தேதி வரை

செய்முறைத் தோ்வுகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com