இரு பைக்குகள் மோதல்: இருவா் பலி

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் திங்கள்கிழமை இரவு இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.


தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் திங்கள்கிழமை இரவு இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி அத்திமரப்பட்டியைச் சோ்ந்த ஜெயமுருகன் மகன் அருண் (20). வெல்டிங் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு முத்தையாபுரத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று விட்டு, அத்திமரப்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தாராம். வண்ணாா் கிடங்கு பாட்டில் நிறுவனம் அருகிலுள்ள சிறிய வளைவில் திரும்பிய போது, எதிரே புதுக்கோட்டையில் இருந்து முத்தையாபுரம் நோக்கி மோட்டாா் ைசைக்கிளில் வந்த, முத்தையாபுரத்தைச் சோ்ந்த செல்லையா மகன் முருகன் (58) என்பவரின் மோட்டாா் சைக்கிள் எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில் அருண், முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com