கழுகுமலை கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இத்திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலையில் காலையில் திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

பின்னா் காலை 5.15 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெற்றது. தொடா்ந்து, கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றிற்கு 18 வகையான மூலிகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் கோயில் நிா்வாக அலுவலா் காா்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com