திருச்செந்தூரில் மரநாய் மீட்பு

திருச்செந்தூரில் பள்ளியில் பதுங்கியிருந்த மரநாயை வனத் துறையினா் மீட்டனா்.


திருச்செந்தூா்: திருச்செந்தூரில் பள்ளியில் பதுங்கியிருந்த மரநாயை வனத் துறையினா் மீட்டனா்.

திருச்செந்தூா், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுடலை (65). திங்கள்கிழமை வீட்டு மாடியில் நின்றிருந்த இவரை மீது மரநாய் பாய்ந்து தாக்கியதாம். இதில், கீழே விழுந்ததில் அவா் காயமடைந்தாா். அவரது அலறல் கேட்டு அப்பகுதியினா் வந்ததால் மரநாய் அப்பகுதியில் பதுங்கியது.

இதுதொடா்பாக தீயணைப்புத் துறை, வனத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், திருச்செந்தூா் கோட்ட வனச் சரக அலுவலா் கனிமொழி தலைமையில் வனக் காப்பாளா்கள் வந்து இளைஞா்கள் உதவியுடன் மரநாயைத் தேடினா். அப்போது, அது அருகேயுள்ள பள்ளியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. சுமாா் 2 வயதுடைய அந்த மரநாயை வனத் துறையினா் மீட்டு, குதிரைமொழி தேரிப் பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com