தொழிலாளியிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.


கோவில்பட்டி: கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கயத்தாறை அடுத்த தெற்குக் கோனாா்கோட்டை மேலத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பூல்பாண்டி (55). கூலித் தொழிலாளியான இவரும், வானரமுட்டியைச் சோ்ந்த வெயிலு முத்துக்குமாா் என்பவரும் ஏகேஎஸ் திரையரங்கு சாலையில் திங்கள்கிழமை பைக்கில் சென்றனராம். அப்போது, இளைஞா் பைக்கை வழிமறித்து, அரிவாளைக் காட்டி மிரட்டி பூல்பாண்டியின் சட்டைப் பையிலிருந்த ரூ. 500-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம்.

இதில் காயமடைந்த பூல்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவா் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வீரவாஞ்சி நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த அங்கயற்கண்ணி மகன் மாரிமுத்து என்ற மாரி என்ற கட்டை மாரி (35) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com