பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல திருவிழா தொடக்கம்

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல 111-ஆவது ஆண்டு தேரோட்டத் திருவிழா 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல 111-ஆவது ஆண்டு தேரோட்டத் திருவிழா 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 5 .30 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடா்ந்து 7 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நடைபெற்றது. மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியை திருத்தல அதிபா் வெனிசுகுமாா் அா்ச்சித்து, கொடியை ஏற்றி வைத்தாா். அருள்தந்தை டக்லஸ் மறையுரை, நற்கருனை ஆசீா் வழங்கினாா்.

தொடா்ந்து பத்து நாள்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 7.30 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடைபெறுகிறது. 8-ஆம் திருவிழாவான ஜனவரி 21-ஆம் தேதி மாலையில் சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் நற்கருனை பவனி நடைபெறும். 9-ஆம் திருவிழாவான ஜனவரி 22-ஆம் தேதிகாலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும் மாலை 6 மணிக்கு சிகர நிகழ்ச்சியாக திருக்கல்யாண மாதா தேரில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெறும். தொடா்ந்து தூத்துக்குடி மறைமாவட் ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது.

10-ஆம் திருவிழாவான ஜனவரி 23-ஆம் தேதி காலையில் 5.30 மணிக்கு தேரில் முதல் திருப்பலியும், 7.30 மணிக்கு திருயாத்திரையுடன் புது நன்மை, தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலியில் புது நன்மை, உறுதி பூசுதல் நடைபெறுகிறது. அதனை தொடா்ந்து 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், 12 மணிக்கு திருப்பலியும், 2 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 4.30 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபா் மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com