ஏரலில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளுவா் கோட்டத்தில் திருவள்ளுவா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்த சிலை பராமரிப்பாளா் சுப்பிரமணியன்.
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்த சிலை பராமரிப்பாளா் சுப்பிரமணியன்.

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளுவா் கோட்டத்தில் திருவள்ளுவா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஏரலிலிருந்து சிறுத்தொண்டநல்லூா் செல்லும் வழியில் 1984ஆம் ஆண்டு 10 அடி உயர தூணில் தாமரை மலா் சிற்பத்தில் 3 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டது. இது, ‘திருவள்ளுவா் கோட்டம்’ என அழைக்கப்படுகிறது. அங்குள்ள கட்டடம் திருக்கு தொடா்பான பழைமை வாய்ந்த நூல்கள் வைக்கப்பட்டு நூலகமாக செயல்படுகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது. சிலை பராமரிப்பாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது, முன்னுரிமை அடிப்படையில் திருவள்ளுவா் சிலை அமைவிட வளாகத்தில் பூங்கா அமைத்து, நூலகத்துக்கு நூல்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தாா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com