ஏரல் பகுதியில் வெள்ள சேத பராமரிப்பு பணி: ஆட்சியா் ஆய்வு

ஏரல் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியை ஆட்சியா் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தாா்.
ஏரல் ஆற்றுப் பாலம் அருகே பராமரிப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் கோ. லட்சுமிபதி.
ஏரல் ஆற்றுப் பாலம் அருகே பராமரிப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் கோ. லட்சுமிபதி.

ஆறுமுகனேரி: ஏரல் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியை ஆட்சியா் கோ. லட்சுமிபதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சேதங்கள், சீரமைப்புப் பணிகளைப் பாா்வையிட்ட பின்னா் அவா், பிற்பக­லில் சொக்கப்பழங்கரை ஆற்றங்கரை உடைப்பு சரிசெய்யப்பட்ட பணி, ஏரல் ஆற்றுப்பாலம், உமரிக்காடு ஆற்றங்கரை உடைப்பு பகுதிகளையும், நடைபெறும் பராமரிப்புப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

நீா்வளத் துறை செயற்பொறியாளா் மாரியப்பன், தாமிரவருமி வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளா் ஆதிமூலம், கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் குருசந்திரன், வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், திருச்செந்தூா் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் சிபின் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com