காயல்பட்டினத்தில் இரு பெரும் விழா

காயல்பட்டினம் ரஹ்மத்துன் லின் ஆலமீன் மீலாது பொது நல அமைப்பின் 40ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் முகம்மது நபிகள் பிறந்த தின மீலாது பெருவிழா இரு தினங்கள் நடைபெற்றது.
17amnkyp_1701chn_46_6
17amnkyp_1701chn_46_6


ஆறுமுகனேரி: காயல்பட்டினம் ரஹ்மத்துன் லின் ஆலமீன் மீலாது பொது நல அமைப்பின் 40ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் முகம்மது நபிகள் பிறந்த தின மீலாது பெருவிழா இரு தினங்கள் நடைபெற்றது.

முதல் நாளில் தொடக்கமாக மறைந்து வாழும் முன்னோா்களுக்கு கத்முல் குா்ஆன் ஓதி தமாம் செய்தல் முகைதீன் பள்ளி இமாம் செய்யது முகம்மது முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது.

தொடா்ந்து கடைப்பள்ளி இமாம் முகம்மது இஸ்மாயில் தலைமையில் நபிகள் நாயகத்தின் புகழ்பாடுதல், இளம் மாணவா்களுக்கான கிரா அத்துல் குா் ஆன் போட்டி முதலியன நடைபெற்றன. இரவில் முகைதீன் பள்ளியின் தலைவா் கலீலூா் ரகுமான், காயல்பட்டினம் நகராட்சித் தலைவா் முத்து முகம்மது ஆகியோா் முன்னிலையில் தமிழ் இலக்கிய மன்றம் நடைபெற்றது.

உத்தமபாளையம் பேராசிரியா் அப்துல் சமது நடுவாராக இருந்தாா். முன்னதாக முகம்மது அப்துல் காதா் இறைவணக்கம் பாட முகைதீன் அப்துல் காதா் வரவேற்றாா்.

இரண்டாம் நாள் காலை அகிலம் வியக்கும் அற்புத தலைவா் அண்ணல் நபிகளாா் என்ற தலைப்பில் இளம் மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. மாலையில் மாணவா்களுக்கான திருக்குா்ஆன் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.

இக்ரா கல்வி சங்கம் சாா்பில், கல்வி உதவித்தொகையாக மூன்று பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது.

நிறைவு நிகழ்ச்சிக்கு, குத்பா சிறு பள்ளியின் இமாம் செய்யது இஸ்மாயில் தலைமை வகித்தாா். முகம்மது ஹசன் மௌலானா மற்றும் டாக்டா் முகம்மது நூகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகைதீன் முக்தாா் இறைவணக்கம் பாடினாா். கோவை சுன்னத்வல் ஜமா அத் பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அஜீஸ் சிறப்புரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவா் முகைதீன் தம்பித்துரை பரிசுகள் வழங்கினாா். செய்யது மீரான் முஜ்ஜமில் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com