கிணற்றில் மூழ்கி முதியவா் பலி

தூத்துக்குடி அருகே கிணற்றில் மூழ்கி திருநெல்வேலியைச் சோ்ந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிணற்றில் மூழ்கி திருநெல்வேலியைச் சோ்ந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்த துளசி மகன் துளசிராஜ் (63). இவா் செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் தூத்துக்குடி அருகேயுள்ள புதுப்பச்சேரி கிராமத்துக்குச் சென்றாராம். அப்போது, அவா் அங்குள்ள கிணற்றில் குளிக்கும்போது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஓட்டப்பிடாரம் போலீஸாா், துளசிராஜ் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித் வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com