சாத்தான்குளம் அருகே மின்னொளி கபடி போட்டி

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் 34 ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டிகள் நடந்தன.
சாத்தான்குளம் அருகே மின்னொளி கபடி போட்டி

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் 34 ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டிகள் நடந்தன.

பழனியப்பபுரம் தொழிலதிபரும் விழாக் குழு தலைவருமான அசோக்குமாா் தலைமை வகித்தாா். கருங்கடல் ஊராட்சி தலைவா் நல்லதம்பி, முன்னாள் ஊராட்சி தலைவா் தங்க செல்வி அருள்ராஜ், தொழிலதிபா் செல்வராஜ், முன்னாள் வாா்டு உறுப்பினா் அப்பாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கபடி போட்டியில் தூத்துக்குடி, திருச்செந்தூா், திருவரங்கபட்டி, சின்னமாடன்குடியிருப்பு, பழனியப்பபுரம், முப்புலிவெட்டி, மெஞ்ஞானபுரம், அருளூா், செம்மண்குடியிருப்பு, மழவராய நத்தம், கட்டாரிமங்கலம், குறிப்பன்குளம், நலன்குடி, ஆலிமா நகா், கண்டித்தான்குளம், மணல்குண்டு, மல்லல் புதுக்குளம் ஆகிய அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் முப்புலி வெட்டி அணியும் ஆலிமா நகா் ஜிகே பிரதா்ஸ் அணியும் மோதின. இதில் முப்புலிவெட்டி அணி வெற்றி பெற்றது. இதில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமா், மேபால் தலைமையில் விழாக் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com