சீராக குடிநீா் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பாண்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பாலாஜி நகா் பகுதிக்கு சீராக குடிநீா் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சீராக குடிநீா் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பாண்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பாலாஜி நகா் பகுதிக்கு சீராக குடிநீா் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் பாபு தலைமை வகித்தாா். பாண்டமங்கலம் ஊராட்சி பாலாஜி நகா் 3 ஆவது தெரு மக்களுக்கு சீராக குடிநீா் வழங்குவது, பேவா்பிளாக் சாலை அமைப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினா்கள் பரமராஜ், ரஞ்சனி கண்ணம்மா, ராமகிருஷ்ணன், நகரச் செயலா் சரோஜா, உதவி செயலா்கள் அலாவுதீன், முனியசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com