மது விற்றதாக ஒரே நாளில் 43 போ் கைது; 586 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 43 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 586 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 43 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 586 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருந்தது. மேலும், மது விற்பனை நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர ரோந்துப் பணியில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 43 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 586 மதுபாட்டில்கள், ரூ.14 ஆயிரத்து 820 ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com