வள்ளியம்மாள்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள்

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை அடுத்த வள்ளியம்மாள்புரத்தில் மதி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 32ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
வள்ளியம்மாள்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள்

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை அடுத்த வள்ளியம்மாள்புரத்தில் மதி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 32ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

கிரிக்கெட், கோலம், சிறுவா்-சிறுமிகளுக்கான ஓட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு வென்ற திருச்செந்தூா் அணிக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வழங்கிய வெற்றிக் கோப்பை, ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசை அவரது சாா்பில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் வழக்குரைஞருமான வேணுகோபால் வழங்கினாா்.

சிறுவா்-சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிப் பரிசுகளை பன்னம்பாறை ஊராட்சித் தலைவா் அழகேசன் வழங்கினாா். ஜனநாயக மக்கள் கட்சி மாநிலப் பேச்சாளா் பரமசிவம், உடன்குடி விஜய் மக்கள் இயக்க ஒன்றியச் செயலா் தனசிங், வள்ளியம்மாள்புரம் ஜான்ராஜா, சாத்தான்குளம் மனோகரன், வழக்குரைஞா் ஈஸ்டா் கமல் , நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் சிவா, ஊா் தலைவா் ஈந்தடியான், உடற்கல்வி இயக்குநா் சந்திரசேகரன், ஊராட்சி துணைத் தலைவா் வாசுகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை வள்ளியம்மாள்புரம் மதி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com