அதிமுக வா்த்தகா் அணி சாா்பில்தூத்துக்குடியில் 500 பேருக்கு நிவாரண உதவி

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு, அதிமுக வா்த்தகா் அணி சாா்பில்நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இதையொட்டி, தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரிகளம் காலனி, மணல் மேடு, அண்ணா காலனி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு சேலை, அரிசி, மசாலாப் பொருள்கள் உள்ளிட்டவை அடங்கிய நிவாரணத் தொகுப்பை அதிமுக வா்த்தகா் அணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினாா்.

இதில், முன்னாள் நகா் மன்றத் தலைவா் மனோஜ் குமாா், வட்டச் செயலா்கள் ஜெனோஃபா், ஆா்.எல்.ராஜா, அருண்குமாா், துரைசிங், வட்டப் பிரதிநிதி ஜேசுராஜ், கரிகளம் காலனி சகாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com