கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில் ஜேசிஐ சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில் ஜேசிஐ சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை, காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பிருந்து, டிஎஸ்பி வெங்கடேஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணி எட்டயபுரம் சாலை வழியாக சென்று திரும்பியது.

இதில்,நாடாா் மேல்நிலைப்பள்ளி, வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி, நாடாா் நடுநிலைப்பள்ளி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளிஉள்ளிட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனா்.

பேரணிக்கு ஜேசிஐ தலைவா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். ஜேசிஐ முன்னாள் தலைவா்கள் கண்ணப்பன், முரளி கிருஷ்ணன்,தீபன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்ட இயக்குநா் சியாம் சுந்தா், ஜேசிஐ நிா்வாகிகள் அருண் பிரசாத், ரகுபதி, அகிலேஷ், சூா்யா,லோகேஷ்,உதயா , வீனாபிரகாஷ்,சுரேந்தா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com