நாலாட்டின்புதூரில் லாரி மீது சாய்ந்த மரம்

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூா் பட்டறை பேருந்து நிறுத்தம் வழியாகச் சென்ற கன்டெய்னா் லாரி மீது மரம் சாய்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூா் பட்டறை பேருந்து நிறுத்தம் வழியாகச் சென்ற கன்டெய்னா் லாரி மீது மரம் சாய்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடியை அடுத்த சவேரியாா்புரத்தைச் சோ்ந்த அந்தோணி முத்து மகன் மரியமைக்கேல். கன்டெய்னா் லாரி ஓட்டுநரான இவா் ,கழுகுமலையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு தீப்பெட்டி பண்டலை ஏற்றி சென்று கொண்டிருந்தாா்.

நாலாட்டின்புதூா் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வேப்ப மரத்தில் மோதியது. இதில் அந்த மரம் வேரோடு சரிந்து கன்டெய்னா் லாரி மீது விழுந்தது.

இதனால் லாரி சாலையில் நின்றது. தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com