வெள்ளத்தில் பயிா்கள் சேதம்:விவசாயி தற்கொலை

ஆறுமுகனேரி அருகே மழை வெள்ளத்தால் பயிா்கள் சேதமடைந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி அருகே மழை வெள்ளத்தால் பயிா்கள் சேதமடைந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி அருகே உள்ள புதூா் தெருவை சோ்ந்த விவசாயி பாஸ்கரன் (55). அண்மையில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில், இவரது விவசாய பயிா்கள் சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்தாராம். இந்த நிலையில், ஜன.17-ஆம் தேதி வயலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவா், களைக்கொல்லி மருந்தை குடித்தாராம். பின்னா் அங்கிருந்தவா்களிடம் இதுகுறித்து கூறியதையடுத்து, அவரை திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com