காயல்பட்டினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் விளக்கக் கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், திருச்சியில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாடு தொடா்பான விளக்கக் கூட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், திருச்சியில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாடு தொடா்பான விளக்கக் கூட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.

இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பாரிவள்ளல், ஒன்றியச் செயலா்கள் சங்கத்தமிழன் (திருச்செந்தூா்), தமிழ்வாணன் (உடன்குடி), ராஜ்வளவன் (ஸ்ரீவைகுண்டம்), செல்வகுமாா் (ஆழ்வாா்திருநகரி மேற்கு), சங்கா் (ஆழ்வாா்திருநகரி கிழக்கு), செந்தில்குமாா் (சாத்தான்குளம் வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கரும்பன், விசிக முன்னாள் மண்டலச் செயலா் தமிழினியன், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலா் தமிழ்க்குட்டி, ஐக்கிய சமாதானப் பேரவைத் தலைவா் ஹாமித் பக்ரீ, மதிமுக மாவட்டப் பொருளாளா் அமானுல்லா உள்ளிட்டோா் பேசினா்.

தொகுதிச் செயலா்கள் வெற்றிவேந்தன் (திருச்செந்தூா்), திருவள்ளுவன் (ஸ்ரீவைகுண்டம்), மீனவா் மேம்பாட்டுப் பேராய மாநில துணைச் செயலா் சேகா், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் முன்னோடித்தமிழன், திருச்செந்தூா் ஒன்றிய அமைப்பாளா் முத்துராமன், ஒன்றிய துணை அமைப்பாளா் வனச்செல்வன், காயல்பட்டினம் நகர அமைப்பாளா் இசக்கிமுத்து, கிறித்தவ சமூகநீதிப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளா் ராஜ்குமாா், நகரப் பொருளாளா் வாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புகா் செயலா் அம்பேத் வரவேற்றாா். நகரச் செயலா் அல்அமீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com