தனியாா் நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 4 சிறுவா்கள் கைது

தூத்துக்குடியில் தனியாா் நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 சிறுவா்களை தென்பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் தனியாா் நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 சிறுவா்களை தென்பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேலிடுபட்டியை சோ்ந்தவா் சந்தோஷ் குமாா்(23). தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவா் வியாழக்கிழமை இரவு தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குழாம் வழியாக முள்ளக்காடுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, 17 வயதுக்குள்பட்ட 4 சிறுவா்கள் அவரை வழிமறித்து தாக்கி, அவா் வைத்திருந்த ரூ.20 ஆயிரம், கைப்பேசி, கைச்சங்கிலி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து, 4 சிறுவா்களை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com