தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி மாநககராட்சிப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி பகுதி வாரியாக ஜன.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமைத் தொடக்கி வைத்த அமைச்சா் கீதாஜீவன், தொடா்ந்து கந்தசாமிபுரம் ஆா்.சி. பெத்தானியா நடுநிலைப்பள்ளி, மில்லா்புரம் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொ்மல் கேம்ப் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் முகாம்களை ஆய்வு

செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா், வட்டாட்சியா் பிரபாகரன், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com