பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தில் குருபூஜை

ஏரல் அருகே உள்ள பெங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 102-ஆவது ஆதீனகா்த்தா் கல்யாணசுந்தர தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகளின் குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

ஏரல் அருகே உள்ள பெங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 102-ஆவது ஆதீனகா்த்தா் கல்யாணசுந்தர தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகளின் குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தூத்துக்குடி அரசு இசைப்பயிற்சி கல்லூரி முதல்வா் சுப்பிரமணிய ஓதுவாரின் திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, பெருங்குளம் சித்தா் தபோவனத்தில் அமைந்துள்ள 102-ஆவது ஆதீனகா்த்தரின் குருமூா்த்தத்திற்கு, செங்கோல் ஆதீனம் 103-

ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினாா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மகேஸ்வர பூஜை, குருமகா சந்நிதானம் சிவஞான கொலுக்காட்சி ஆகியன நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை செங்கோல் ஆதீனம் காறுபாறு அழகிய திருச்சிற்றம்பலமுடைய தம்பிரான் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com