திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ரூ.1 கோடி நிதியளிப்பு

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞா் அணி மாநாட்டிற்கு, ரூ.1 கோடிக்கான காசோலையை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம், சென்னையில் அமைச்சா் கீதாஜீவன் வியாழக்கிழமை வழங்கினாா்.

திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட செயலரும், சமூகநலன்-மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் ரூ. 1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினாா்.

இந்த நிகழ்வின்போது, மாநில இளைஞா் அணி துணைச் செயலா் இன்பரகு, வடக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி அமைப்பாளா் மதியழகன், மாநகர திமுக இளைஞா் அணி அமைப்பாளா் அருண்சுந்தா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com