காயல்பட்டினத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

காயல்பட்டினம் பெரிய சம்சுதீன் ஒலி­யுல்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசல், நெய்வேலி­ என்.எல்.சி. நிறுவனம், திருநெல்வேலி­ அரவிந்த் கண் மருத்துவமனைஆகியன சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, என்.எல்.சி. தமிழ்நாடு பவா் நிறுவன சிஇஓ அனந்தராமானுஜம் தலைமை வகித்தாா். நிறுவன சிஎப்ஓ தனபால், பொது மேலாளா் ராஜசேகரன், துணை பொது மேலாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமை, காயல்பட்டினம் முஸ்லி­ம் ஐக்கிய பேரவை செயலா் வாவு சம்சுதீன் தொடங்கி வைத்தாா்.

சம்சுதீன் ஜும்அ பள்ளி செயலா் அப்துா் ரஹ்மான், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் சதக்கத்துல்லாஹ், சமூக ஆா்வலா் காயல் ஜெஸ்முதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் 400 போ் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com