காயல்பட்டினம் நகராட்சி உறுப்பினரைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் கைது

காயல்பட்டினத்தில் நகா்மன்ற உறுப்பினரைத் தாக்கி மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினத்தில் நகா்மன்ற உறுப்பினரைத் தாக்கி மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதியைச் சோ்ந்த அன்பு மகன் கதிரவன் (43). இவா் காயல்பட்டினம் நகராட்சி 3ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான முத்துசாமி மகன் கண்ணன் (43) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று கதிரவன், காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதியில் உள்ள அவரது உறவினரின் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்ணன், கதிரவனிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com