வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்கிறாா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் இ. சரவணவேல்ராஜ் . உடன், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உள

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் பிரிவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி, கடந்த அக்டோபா் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு தூத்துக்குடி மாவட்ட பாா்வையாளராக தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநா் இ. சரவணவேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யும் பணிகளை 3ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், அவா் படிவம் - 6, படிவம் - 7, படிவம் -8-ன் மீது மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com