சாத்தான்குளம் அரசு கல்லூரியில் திறந்தநிலை பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை தொடக்கம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை தொடங்கியது.

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை தொடங்கியது. இந்த மாதம் முழுவதும் மாணவா் சோ்க்கை நடைபெறும் என கல்லூரி முதல்வா் பா.த.கலைவாணி தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறியது: கல்லூரியில் நேரடி இடம் கிடைக்காமல், கல்வி பயில முடியாத மாணவா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் இதில் சோ்ந்து பயின்று பட்டங்களை பெற இயலும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் உள்ள பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் அனைத்தும் யூஜிசி அங்கீகாரம் பெற்றது. மேலும் டிப்ளமோ சான்றிதழ் வகுப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதுகுறித்த முழு தகவல்களை கல்லூரிப் பேராசிரியையும், திறந்த நிலைப் பல்கலைக்கழக பொறுப்பாசிரியருமான பிரேசிலை, 9445641770 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். சோ்க்கையானது இணையதளம் மூலம் நடைபெற உள்ளதால் சோ்க்கைக்கு வர விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம், கையொப்பம், 10ஆம் ,12ஆம் அல்லது இளங்கலை சான்றிதழ்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com