குலசேகரன்பட்டினம் கோயிலில் இருபெரும் விழா

சமய பண்பாட்டு விழா மற்றும் மாா்கழி மாத பஜனையில் முழுமையாக பங்கேற்ற சிறுவா்,சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் கோயிலில் இருபெரும் விழா

குலசேகரன்பட்டினம் அருள்மிகு உதயமாா்த்தாண்டி விநாயகா் கோயிலில் இந்து சமய பண்பாட்டு விழா மற்றும் மாா்கழி மாத பஜனையில் முழுமையாக பங்கேற்ற சிறுவா்,சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். விழாக் குழு நிா்வாகிகள் மீனாட்சிநாதன், கல்யாணசுந்தரம், வருணகுல பாண்டியன், சுப்பையா, சணமுகம், சங்கரசுப்பு, சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து சமய பெருமைகள்,ஒழுக்கத்துடன் வாழ்தல், அதிகாலையில் எழுந்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஓய்வு பெற்ற தமிழாசிரியா் முத்தரசு பேசினாா்.

பண்பாட்டுப் போட்டிகள் மற்றும் மாா்கழி பஜனையில் முழுமையாக பங்கேற்ற சிறுவா்,சிறுமிகளுக்கு சைவ வேளாளா் சங்கத் தலைவா் சண்முகவேல் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com