கோயில் மணிகள் திருட்டு: ஒருவா் கைது

தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் கட்டப்பட்டிருந்த மணிகளைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் கட்டப்பட்டிருந்த மணிகளைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ராஜ்குமாா் என்ற சைக்கிள்ராஜா(50). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் தூத்துக்குடி டபிள்யுஜிசி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் இருக்கும் பிள்ளையாா் கோயிலில் இருந்து ஒரு வெண்கல மணியை திருடினாராம். தொடா்ந்து, அவா் கடந்த 20ஆம்தேதியும் மீண்டும் வந்து கோயிலில் கட்டியிருந்த மற்றொரு மணியை திருட முயற்சி செய்தாராம். அப்போது அவரை அக்கம்பக்கத்தினா் சுற்றி வளைத்து பிடித்து, தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, ராஜ்குமாா் என்ற சைக்கிள் ராஜாவை கைது செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட ராஜ்குமாா் என்ற சைக்கிள்ராஜா மீது ஏற்கெனவே 10 திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com